✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!

செல்வகுமார்   |  03 Jul 2024 08:41 PM (IST)

ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டியானது மார்ச் 1 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியா vs பாகிஸ்தான்

2025 ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டமானது பாகிஸ்தானில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது, 8 வருடங்களுக்கு பின்பு நடைபெறுகிறது.  இந்த முறை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது, பாகிஸ்தான் நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில், 8 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியானது வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தொடரில், 15 போட்டிகளுக்கான அட்டவணையை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐசிசி -யிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது, பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியானது, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு நுழையும் பட்சத்தில், அந்த போட்டிகளும், பாதுகாப்புடன் லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இந்த போட்டிகளானது பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சார்பில் இன்னும் ஒப்புதல் தெரிவிக்கப்படவில்லை. 

மார்ச் 1:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான்  இடையேயான முதல் போட்டியானது பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் பட்சத்தில்,  மார்ச் 1 ஆம் தேதி லாகூரில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட்  விளையாட, பாதுகாப்பு காரணங்களை கூறி, இந்தியா தவிர்த்து வருகிறது. இதற்கு பல போட்டிகள் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறாமல் , இதர நாடுகளில் நடைபெற்றது. 

இந்நிலையில், இந்த முறை போட்டியானது, பாகிஸ்தான் நாட்டின் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி பங்கேற்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களை காட்டி , இந்திய அணி ஒப்புதல் தருவது சந்தேகம்தான் எனவும் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்புதான் உண்மையான நிலையானது தெரியவரும். 

Published at: 03 Jul 2024 08:40 PM (IST)
Tags: IND vs PAK BCCI INDIA VS PAKISTAN ICC Champions Trophy 2025
  • முகப்பு
  • விளையாட்டு
  • கிரிக்கெட்
  • India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.