ICC Champions Trophy 2025 :ட்விஸ்ட் வைத்த மழை.. சூடுப்பிடித்த சாம்பியன்ஸ் டிராபி.. குரூப் பி பிரிவில் அரையிறுதியில் யார்?
ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் இருந்து எந்த அணியும் தகுதி பெறவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி 2025:
பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைப்பெற்று வருகிறது, இந்த தொடரில் குரூப்- பி பிரிவில் தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக , இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன, இதனால் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் மூன்று புள்ளிகளை பெற்றுள்ளது. ஒரு வேளை இந்த போட்டி மழை பெய்யாமல் நடந்து இருந்தால் இரு அணிகளில் ஒரு அணி அரையிறுதிக்கு மிக அருகில் செல்லும்
இந்தியாவும் நியூசிலாந்தும் குரூப் ஏ-யிலிருந்து அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. ஆனால் குரூப் பி-யில் பரபரப்பான முடிவு எட்ட உள்ளது. அதில் எந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை இதில் காண்போம்.
தென்னாப்பிரிக்கா:
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அவர்களின் ரன் ரேட் (NRR) +2.140 ஆக உள்ளது. தங்களின் இறுதி லீக் போட்டியில் இங்கிலாந்தை வென்றால் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அவர்கள் தோற்றாலும், இங்கிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் தென் ஆப்பிரிக்க அணியால் முன்னேற முடியும்.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவின் அரையிறுதி விதியும் அவர்களின் கைகளில்தான் உள்ளது. இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஆஸ்திரேலிய அணி தகுதி பெற தங்கள் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். இருப்பினும், அவர்கள் தோற்றால், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்
இங்கிலாந்து:
ஆஸ்திரேலியாவிடம் முதல் லீக் போட்டி தோல்விக்குப் பிறகு ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். குரூப் பி-யில் உள்ள நான்கு அணிகளின் தலைவிதியும் பிப்ரவரி 26 (புதன்கிழமை) அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து போட்டியை பொறுத்தது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் தங்கள் இறுதி குரூப் போட்டிகளில் தோற்றால், இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இருப்பினும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை தோற்கடித்தாலும், இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டையும் தோற்கடிப்பதன் மூலம் தகுதி பெற முடியும்.
ஆப்கானிஸ்தான்:
தொடக்க ஆட்டத்தில் கடும் தோல்வியடைந்த பிறகு, ஆப்கானிஸ்தானின் தகுதி நம்பிக்கைகள் இப்போது அவர்களின் கடைசி இரண்டு போட்டி மற்றும் பிற அணிகளின்முடிவுகளைப் பொறுத்தது. அரையிறுதிப் போட்டிக்கான போட்டியில் தொடர்ந்து இருக்க இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டையும் ஆப்கானிஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.
குரூப் பி புள்ளிப்பட்டியல்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை |
தென்னாப்பிரிக்கா | 2 | 1 | 0 | 1 |
ஆஸ்திரேலியா | 2 | 1 | 0 | 1 |
இங்கிலாந்து | 1 | 0 | 1 | 0 |
ஆப்கானிஸ்தான் | 1 | 0 | 1 | 0 |