ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இப்ரஹிம் ஸ்த்ரான் (Ibrahim Zadran) சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.


சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில்  டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸாட்ரன் 146 பந்துகளுக்கு 12 பவுண்ட்ரிகள் 6 சிக்ஸர்கள் உடன் 117 ரன் எடுத்து லியம் லிவிங்ஸ்டோன் பந்தில் அவுட் ஆனார். இதன் மூலம் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தப் போட்டியில் இப்ரஹிம் 6 சிக்ஸர்கள் அடித்து, இதுவரை நடந்துள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்லீஷ் ஒரே போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.






இப்ரஹிம் ஸ்த்ரான் அடித்த 177 ரன்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் அவர்.  இந்தியாவின் சவுரவ் கங்குலில், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். பாகிஸ்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்க எதிராக அடித்த 165 ரன்கள் அதிகமாக இருந்தது. இதை ஆப்கானிஸ்தான் வீரர் இப்ரஹிம் முறியடித்துள்ளார்.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள்



  • இப்ரஹிம் ஸ்த்ரான் 177 ரன்கள் vs இங்கிலாந்து - 2025

  • பென் டக்கெட் 165 ரன்கள் vs ஆஸ்திரேலியா - 2025

  • நாதான் அஸ்டில், 145*  ரன்கள் vs USA - 2004

  • ஆன்டி ஃப்ளவர் 145  vs இந்தியா -2022 

  • சவுரவ் கங்குலி, 141 ரன்கள் vs தென்னாபிரிக்கா - 2000

  • சச்சின் டெண்டுல்கர் 141 ரன்கள் vs ஆஸ்திரேலியா - 1998

  • க்ரீம் ஸ்மித் 141 ரன்கள் vs இங்கிலாந்து - 2009






ஐ.சி.சி. போட்டிகளில் சதமடித்த முதல் ஆப்கன் வீரர் என்ற சாதனையை இப்ரஹிம் படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.