சர்வேதச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 50- விக்கெட் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில்  ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.


சாம்பியன்ஸ் ட்ராபி - இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி 


சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில்  டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா அடல் 4 ரன்னிலும், ரஹ்மத் ஷா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.


ஜோஃப்ரா ஆர்ச்சர் ரெக்கார்டு:


இந்தப் போட்டியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை எடுத்தபோது, ஆர்ச்சர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பதாவது விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆர்ச்சர் முதலிடத்தில் உள்ளார். குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஆர்ச்சர் 30 போட்டிகளிகிலேயே 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆர்ச்சர் முதலிடத்தில் தொடர்கிறார். 






அதிவேகமாக 50 விக்கெட் எடுத்து இங்கிலாந்து வீரர்கள் விவரம்:


ஜோஃப்ரா ஆர்ச்சர் - 30 போட்டிகள்


ஜேம்ஸ் ஆண்டர்சன் - 31 போட்டிகள்


ஸ்டீவ் ஹர்மிசன் - 32 போட்டிகள்


ஸ்டீவ் ஃபின் - 33 போட்டிகள்


டேரன் காஃப் - 34 போட்டிகள்


சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.  குரூப் பி பிரிவில் முன்னேறப் போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி இருக்கும்.