இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அதே நேரம் உள் நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.


இந்தியா - வங்கதேசம்:


இச்சூழலில் தான் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


டி20 உலகக்கோப்பைக்கு பின் பும்ரா முதல்முறையாக அணியில் இடம்பெற்று இருப்பதால் அவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களான சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.


அதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்  இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 16 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் சீனியர் வீரர்கள் இருப்பதால் 11 பேர் கொண்ட ஆடும் பிளெயிங் லெவனில் இவர்களுக்கு இடம் கிடைக்குமா இல்லையா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


சர்ஃபராஸ் கானின் நிலையை நினைத்து சோகமாக உணர்கிறேன்:


இச்சூழலில் தான் சர்ஃபராஸ் கான்  நிலையை நினைத்து சோகமாக உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"சர்ஃபராஸ் கானின் நிலையை நினைத்து சோகமாக உணர்கிறேன். சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பும் போது வழிவிட வேண்டிய அவசியம் உள்ளது. இவர் மட்டுமல்லாமல் துருவ் ஜூரெலும் பெஞ்ச் செய்யப்படுவார் என்று நினைக்கிறேன்.


வெளிநாடுகளில் கே.எல் ராகுல் எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல் அடுத்ததாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் நாம் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளோம். அதனால் கே.எல் ராகுல் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக இருக்கிறார்" என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க: Watch Video: "3 ஓவர்களுக்குள் அவுட்டாக்குறோம்" : குல்தீப் யாதவுக்கு சவால் விட்ட ரிஷப் பண்ட்! அடுத்து நடந்தது என்ன?


 


மேலும் படிக்க:  Jasprit Bumrah:ரசிகர்கள் ஷாக்..பும்ராவின் ஐந்து பேர் கொண்ட கால்பந்து அணி!தோனி,கோலி இன்..ரோஹித் அவுட்