மின்னல் வேக பந்துவீச்சாளர்:


மின்னல் வேகத்தில் பந்து வீசக் கூடியவர் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியது, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற வீரர்களில் ஒருவர் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடி வருபவர்.  2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றவர். அதேபோல், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 27 விக்கெட்டுளை எடுத்து அசத்தியவர்.


இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் ஐபிஎல் போட்டிகளில் 2014 மற்றும் 2015 ஆகிய சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இச்சூழலில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். அதன்படி இவரை கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இன்று பிறந்த நாள் காணும் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளையாடிய மற்றொரு வீரரான விராட் கோலி குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.


களத்திற்கு வெளியே கோலி வித்தியாசமானவர்:


இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் பேசுகையில், “ ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இரண்டு வருடம் நான் விராட் கோலியுடன் இணைந்து விளையாடினேன். எனக்கு அது அன்பான நினைவாக இருக்கிறது. அந்த அணியில் நான் விளையாடியபோது தான் அவரைப் பற்றி சரியாக அறிந்துகொண்டேன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் களத்திற்கு வெளியே அவர் வித்தியாசமான ஒரு நபர். களத்திற்கு வெளியே இருக்கும் போது விராட் கோலி மிகவும் அன்பாகவும், அடக்கத்துடனும் நடந்து கொள்வார்” என்று கோலியுடனான நட்பு பற்றி பகிர்ந்துள்ளார்.


விராட் கோலி களத்தில் விளையாடும் போது மிகவும் ஆக்ரோஷமாக  விளையாடுபவர், எதிரணி வீரர்களிடம் சண்டைக்கு செல்வார் என்பது போன்றெல்லாம் ரசிகர்கள் கூறுவது உண்டு. அதேபோல், கிரிக்கெட் வீரர்கள் சிலரும் விராட் கோலி மைதானத்தில் கோபமாக இருப்பது பற்றி பேசியிருக்கும் சூழலில்தான், பெங்களூரு அணியில் 2 வருடங்கள் விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய போது அவர் அன்புடன் நடந்து கொண்டார் என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது


மேலும் படிக்க:U19 World Cup 2024: அதிரடி காட்டிய அர்ஷின் குல்கர்னி... புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா! அட ஜெர்சி நம்பர் கூட ஒன்னா இருக்குதப்பா!


மேலும் படிக்க:IND vs ENG Test: இந்திய அணியை ஒயிட் வாஷ் முறையில் வீழ்த்துவோம்.. இங்கிலாந்து வீரரின் பேச்சு