கிறிஸ்துமஸ் நாளில் பிறந்த அலெஸ்டர் குக், உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தனது நாட்டிற்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். இப்படியான சூழலில் இன்று அதாவது டிசம்பர் 25ம் தேதி குக் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் 12000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரரும், இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்களை அடித்த ஒரே வீரரும் இவரே.

அலெஸ்டர் குக் அறிமுகம்:

2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக இந்தியாவுக்கு எதிரான தொடரில் 22 வயது இளைஞராக அலெஸ்டர் குக் அறிமுகமானார். இங்கிலாந்து காயங்களுடன் போராடிக்கொண்டிருந்ததால், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாடிய குக் வெஸ்ட் இண்டீஸிலிருந்து விமானத்தில் 19 மணி நேர பயணத்தை மேற்கொண்டு நாக்பூர் மைதானம் வந்தடைந்தார். பயணத்தின்போது அவ்வளவு சோர்வு இருந்தும் அலெஸ்டர் குக் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி 60 மற்றும் 104 ரன்கள் எடுத்தார், அது கவனிக்க வேண்டிய வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இரண்டு மிக முக்கிய வெற்றிகள்:

டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணி பெற்ற இரண்டு மிக முக்கிய வெற்றிகளில் அலெஸ்டர் குக் என்றென்றும் நினைவுகூரப்படுவார். 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், பிரிஸ்பேன், சிட்னி மற்றும் அடிலெய்டில் நடந்த டெஸ்டில் அலெஸ்டர் குக் 235, 189 மற்றும் 148 ரன்களை அடித்து ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றினார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வென்றது இதுவே முதல் முறையாகும். அந்த தொடரில் அவர் மொத்தமாக 766 ரன்களை குவிந்து அசத்தி இருந்தார். மேலும், இந்தியாவுக்கு எதிரான 2012 தொடரில், குக் அடுத்தடுத்து மூன்று சதங்களை விளாசினார். இதன்மூலம்,  இந்திய மண்ணில் 1984 க்குப் பிறகு இங்கிலாந்து அணி  2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

உலக சாதனை:

அலெஸ்டர் குக் தனது அறிமுகத்திலிருந்து ஓய்வு பெறும் வரை 161 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அவர் அறிமுகமானதில் இருந்து, அவர் இங்கிலாந்துக்காக 1 டெஸ்டில் மட்டுமே விளையாடவில்லை, இது உலக சாதனையாகும்.

அலெஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் 12,472 ரன்கள் எடுத்துள்ளார். குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சதங்களும், 56 அரை சதங்களும், 5 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார். இது தவிர, 92 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 19 அரை சதங்கள் உதவியுடன் 3204 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்: