மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி:


தென்னாப்ரிக்கவின் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இன்று விளையாடமாட்டார் என சில தகவல்கள் வெளியாகின. ஆனால், டாஸ் போடும்போது இந்திய அணி சார்பில் அவரே மைதானத்திற்குள் வந்ததை தொடர்ந்து, இன்றைய போட்டியில் ஹர்மன் பிரீத் விளையாடுவது உறுதியானது. இதனிடையே, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


இந்திய அணி விவரம்:


ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா,  ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன் பிரீத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா,  யாஷ்திகா பாட்டியா, ஸ்னே ரானா, ஷிகா பாண்டே, ராதா யாதவ் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் இந்திய அணி சார்பில் களமிறங்கியுள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக இந்திய அணியில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய பூஜா வஸ்த்ரகருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட, ஸ்னே ரானாவும் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.