முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கின்றனர். இந்த பட்டியலில் முக்கியமான ஒருவர் ஹர்பஜன் சிங். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.


அந்த வரிசையில், சமீபத்தில் ஹர்பஜன் வெளியிட்ட பழைய புகைப்படம்தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 1988, 1999-ஆம் ஆண்டுகளில் U-19 இந்திய அணிக்காக விளையாடியபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஹர்பஜன். அது மட்டுமல்லாது, “என்னுடன் இருப்பவர்கள் யார் என கண்டுபிடிக்கவும். U-19 உலகக்கோப்பை நாட்கள், 1988/99” என பதிவிட்டிருந்தார்.






1988,99-ல் நடைபெற்ற U-19 உலகக்கோப்பை தென்னாப்ரிக்காவில் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இம்ரான் தாஹிர், ரஸா ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தைதான் ஹர்பஜன் பகிர்ந்திருந்தார். 


தனது கரியரின் பிற்காலத்தில் தென்னாப்ரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய இம்ரான் தாஹீர், தொடக்க காலத்தில் பாகிஸ்தானுக்காக விளையாடியவர். ஜூனியர் லெவலில் பாகிஸ்தானுக்காக 20 டெஸ்ட் போட்டிகள், 107 ஒரு நாள், 38 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார் தாஹீர்.


மேலும் படிக்க: ENG vs AUS Ashes: கபாவில் கப்சிப்பான இங்கிலாந்து... 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி!


1996 முதல் 2006-ம் ஆண்டு வரை 7 டெஸ்ட், 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ரஸாவும் இந்த புகைப்படத்தில் இருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது.


டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஹர்பஜன் நான்காவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்த அவரை, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் அஷ்வின் அவரை பின்னுக்கு தள்ளினார். இதனால், 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் ஹர்பஜன்.






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்... 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண