மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடிபெற்ற போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

களமிறங்கும் போது தங்கள் அணிக்கு மிகவும் மோசமான மாலையாக இன்று இருக்கும் என அவர்கள் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் மேக்னாவை க்ளீன் போல்ட் ஆக்கிய கேப் தான் வீசிய நான்கு ஓவரிலும் விக்கெட்டுகளை எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய கேப் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை தனது அசகாய பந்து வீச்சால் நொறுக்கித் தள்ளினார். பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. 

 

குஜராத் அணி தரப்பில் நிலையான பார்ட்னர்ஷிப் யாராலும் அமைக்க முடியாததால் அந்த அணி தொடர்ந்து தடுமாறி வந்தது. 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்து இருந்தது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெடுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்தது. களத்தில் கரத் 32 ரன்களுடனும் மான்சி 5 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர். டெல்லி சார்பில், கேப் 5 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.