கிரஹாம் தோர்ப் காலமானார்:


இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் கிரஹாம் தோர்ப். இவர் இங்கிலாந்து அணிக்காக கடந்த 1993 ஆம் ஆண்டில் ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை 100 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 82 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 


இதில் டெஸ்ட் போட்டியில் தார்பே 6744 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் ஒரு நாள் போட்டிகளில்  2,380 ரன்களை எடுத்துள்ளார். இதைப் போன்று கவுண்டி கிரிக்கெட் சர்ரே அணிக்காக 1988 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இதில் 49 சதங்கள் அடங்கும்.


இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்த கிரஹாம் தோர்புக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் தான் இன்று (ஆகஸ்ட் 5) தன்னுடைய 55வது வயதில் காலமானார்.


பிரமிக்கத்தக்க வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்:


இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"மிகவும் சோகமான ஒரு விஷயத்தை நாங்கள் வெளியிடுகிறோம். கிரஹாம் தோர்ப் நம்மை விட்டு பிரிந்து விட்டார். நாங்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறோம் என்பதை விவரிக்க எங்களுக்கு வார்த்தையே கிடையாது.


இங்கிலாந்து அணிக்காக விளையாடிய மிகச்சிறந்த வீரர்களின் ஒருவராக கிரஹாம் தோர்ப் இருந்திருக்கிறார். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பக்கூடிய வீரராக கிரகாம் தார்பே இருந்தார். அவருடைய திறமையை கேள்வியே கேட்க முடியாது. 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.


சக அணி வீரர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பல பிரமிக்கத்தக்க வெற்றிகளை இங்கிலாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவருடைய மறைவு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மோசமான சூழலில் நாங்கள் கிரஹாம் தோர்ப் குடும்பத்துடன் இருக்கிறோம்"என்று கூறியுள்ளது.