இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் ஸ்பைடர் மேன் போல பந்தை பறந்து வீடியோ காட்சி சமூக வைரலாகி வருகிறது. 


முதல் டெஸ்ட்: 


நியூசிலாந்து மற்றும்  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி முதலில் பேட்டிங்க செய்த நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ப்ஸ் அரைசதம் அடித்து இறுதிவரை 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 


இதையும் படிங்க:Tejaswi Yadav :”இவர் பிரியாணி சாப்பிட போலாம்! இந்தியா விளையாட போகக்கூடாதா?” - சீண்டிய தேஜஸ்வி! அப்செட்டில் பிரதமர்!


இங்கிலாந்து தடுமாற்றம்:


அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பமே தடுமாற்றத்துடன் தொடங்கியது. ஜாக் கிராலி டாக் அவுட்டாகி வெளியேற அறிமுக வீரர் ஜேகப் பெத்தெல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக தனது 150 டெஸ்ட் போட்டியில் களமிறங்னார் உலகின் நம்பர் டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜோ ரூட் நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் மற்றும் ஒல்லி போப் ஜோடி இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. 


ஸ்பைடர்மென் பிலிப்ஸ்:


இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 221 ரன்களாக உயர்ந்த போது ஒல்லி போப் அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் ஸ்பைடர் மேன் போல் காற்றில் பறந்து பந்தை பிடித்தார். தனது அசாத்தியமான கேட்ச் மூலமாக ஒல்லி போப்பை ஆட்டமிழக்க செய்தார். 






ஹாரி புரூக் சதம்: 


அதன் பின்னர் கேப்டன் ஸ்டோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார், இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. ஹாரி புரூக் 132 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.