முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 5 அணிகளுடன் இந்தாண்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது இந்தியன் பிரீமியர் லீக்கை போன்று, மகளிர் பிரீமியர் லீக்(WPL) தொடரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 


மகளிர் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 போட்டிகள் என கணக்கிடப்பட்டு மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. . 


மிரட்டிய டங்க்லி:


இன்று மார்ச் 8ஆம் தேதி பெஙகளூர் அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி, மும்பை போர்பர்ணி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


அதன்படி, குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி குஜராத் அணியின் சார்பில் மேக்னா மற்றும் டங்க்லி களமிறங்கினர்.  போட்டியின் முதல் ஓவர் மெய்டனாக வீசப்பட்டது. ஆர்.சி.பி அணியின் ஷூட் சிறப்பாக பந்து வீசி மெய்டன் ஓவராக மாற்றினார். குஜராத் அணி முதல் ரன் பவுண்டரியாக இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் டங்க்லியால் அடிக்கப்பட்டது.  அதன் பின்னர், மூன்றாவது ஓவரில், முதல் இரண்டு பந்துகளில் மேக்னா பவுண்டரிகளை பறக்கவிட்டு அதகளப்படுத்தியது மட்டும் இல்லாமல், அந்த ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகளை விரட்டினார்.


அதிவேக அரைசதம்:


ஆனால் அதே ஓவரின் கடைசிப் பந்தில் மேக்னா அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட் விழுந்த பின்னரும் தனது அதிரடியான ஆட்டத்தினை டங்க்லி மாற்றிக் கொள்ளவில்லை. அவர் நான்காவது ஓவரில் மட்டும், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டு ஆர்.சி.பி. அணிக்கு சவாலாக இருந்தார். விக்கெட் விழுந்த பின்னரும் தனது அதிரடியான ஆட்டத்தினை டங்க்லி மாற்றிக் கொள்ளவில்லை. அவர் நான்காவது ஓவரில் மட்டும், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டார். அவர் 18 பந்தில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் பறக்கவிட்டு மகளிர் பிரீமியர் லீக்கில் அதிவேக அரைசதம் விளாசினர்.   அதிரடியாக ஆடிவந்த டங்க்லி 28 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.