தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இடையே பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையும் படிங்க: Robin Minz : ஜார்க்கண்ட்டின் கிறிஸ் கெய்ல்! தோணியின் தீவிர பக்தர்..யார் இந்த ராபின் மின்ஸ்
நாடு திரும்பிய கம்பீர்:
இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைப்பெறவுள்ளது. இந்த் நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். இதனால் அவர் அடிலெய்டில் நடைப்பெறும் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் பகல் இரவு பயிற்சி போட்டியில் கம்பீர் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிகிறது. ஆனால் மிக முக்கியமான நேரத்தில் அவர் நாடு திரும்பி இருப்பது கவலையை அளிக்கிறது.
மேலும் கம்பீர் சொந்த காரணங்களுக்காக தான் நாடு திரும்பியுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக(டிசம்பர் 3) அவர் அணியுடன் இணைவார் என்றும் தெரிகிறது.
ஆனால் கம்பீர் வரும் வரை துணை பயிற்சியாளர் அணிக்கு பயிற்சியை அளிப்பார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள நிலையில் அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுப்பட உள்ளார்.
கடந்த முறை இதே அடிலெய்டு மைதானத்தில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒரு சாதனையை இந்திய அணி படைத்திருந்தார்.