ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வுக்கு காரணம் கம்பீர் தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதற்கு கவுதம் கம்பீர் பதிலளித்து பேசியுள்ளார்.
ரோகித்-கோலி ஓய்வு:
இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஒரு வார இடைவெளியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இரு வீரர்களும் 2027 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள நிலையில் அதில் முழு கவனம் செலுத்த இருவரும் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டாலும், அணி பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் பரவின.
கம்பீர் பேச்சு:
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இந்த ஊகங்களுக்கு தற்போது மவுனம் கலைத்து பேசியுள்ளார். இந்திய அணியில் இருவரின் இடம், அணி தேர்வு ஆகியவற்றை குறித்தும் கம்பீரி பேசியுள்ளார்.
கோலி-ரோகித் நிலை என்ன?
ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த கம்பீர் கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவரின் எதிர்க்காலம் குறித்து பேசியுள்ளார். அதில் 2027 ஒரு நாள் உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது, தற்போது எங்களது முழு கவனமும் 2026 - ஆம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெற போகும் டி20 உலகக்கோப்பையை பற்றி தான். ஏனென்றால் இங்கிலாந்து தொடருக்கு பிறகு மிக முக்கியம் வந்தது அது நான். நான் எப்போதும் சொல்வது ஒன்று தான் நீங்கள் நன்றாக விளையாடினால் உங்களுக்கு வயது ஒரு தடையில்லை என்றார்.
உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு ஒரே ஒரு அளவுகோல் தான் அது என்ன வென்றால் நீங்கள் நன்றாக விளையாடுவது தான், இதனால் இருவருக்கும் அணியில் எப்போதும் கதவுகள் திறந்து இருக்கும் என்பதை மறைமுகமாக தெரிவித்தார் கம்பீர்.
ஓய்வு குறித்து
ரோகித் மற்றும் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து பேசிய அவர் ஒருவர் தங்கள் கிரிக்கெட் வாழக்கையை எப்போது தொடங்க வேண்டும் எப்போது முடிக்க வேண்டும் என்பது அவரவர் சொந்த விருப்பம் ஆகும். ஒரு பயிற்சியாளரோ அல்லது அணி தேர்வுக்குழுவினரோ அல்லது வேறு யாரோ அதை முடிவு செய்ய அதிகாரம் இல்லை. அது அவரவர் தனி முடிவு என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய கம்பீர் அவர்கள் இல்லாதது அணிக்கு நிச்சயம் இழப்பு தான் ஆனால் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிருபிக்கவும் அணியை முன்னோக்கி எடுத்துச்செல்லவும் உதவும் என்றார்.