கிரிக்கெட் உலகில் வீரர்களை அளவிற்கு அதிகம் பேசுப்படும் நடுவர்கள் மிகவும் குறைவான ஒன்று. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் ரூடி கோட்சனும் ஒருவர். இவர் 1981ஆம் ஆண்டு முதல் நடுவராக பணியாற்றி வந்தார். 1992ஆம் ஆண்டு இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் மூலம் சர்வதேச நடுவராக முதல் முறையாக பணியாற்றினார்.
இந்நிலையில் நடுவர் ரூடி கோட்சன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வழக்கம் போல் கோல்ஃப் விளையாடிவிட்டு தன்னுடைய இல்லத்திற்கு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவிற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களுரைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ரூடி கோட்சன் 1997ஆம் ஆண்டு முதல் ஐசிசியின் முழு நேர நடுவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் பல்வேறு முக்கியமான சர்வதேச தொடர்களில் நடுவராக செயல்பட்டார். குறிப்பாக 3 ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் நடுவராக இருந்தார். அத்துடன் 2003 மற்றும் 2007 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது நடுவராக செயல்பட்டார்.
இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நடுவராக செயல்பட்டார். அதன்பின்னர் சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்படுவதிலிருந்து ஓய்வை அறிவித்தார். இவர் கள நடுவராக சுமார் 331 சர்வதேச போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அத்துடன் மூன்றாவது நடுவராக 66 போட்டிகளில் இருந்துள்ளார். மேலும் 200 ஒருநாள் மற்றும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு கள நடுவராக செயல்பட்ட முதல் நபர் கோட்சன் தான்.
இவருடைய பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார். அதில், ”நடுவர் ரூடி கோட்சனின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. அவர் களத்தில் சிறப்பாக செயல்பட கூடிய நடுவர்களில் ஒருவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்