Shoaib Akhtar Surgery: கால் ஆப்ரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அக்தர், ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உருக்கமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 


பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர். இவர் தனது முழங்காலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியவில் உள்ள மெல்பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கமான, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை உருக்கும் வகையில் பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். மருத்துவமனை படுக்கையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உடையில் பேசி அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காண்போரை மிகவும் நெகிழவைத்துள்ளது.


அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது, ”நான் இப்போதும் வலியோடு தான் இருக்கிறேன். தயவுசெய்து எனக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. மேலும், இதுதான் என்னுடைய கடைசி ஆப்ரேசனாக இருக்கும் என நம்புகிறேன்” என அவர் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். ஷோயிப் அக்தர் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டு வர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






1990 மற்றும் 2000 கால கட்டங்களில் பாகிஸ்தானின் முக்கிய பவுலராக இருந்தவர் அக்தர். இவரது பந்து வீச்சினை எதிர்கொள்ள தனி வலைப் பயிற்சியில் ஈடுபடாத பேட்ஸ்மேன்களே இல்லை எனும் அளவிற்கு திறமை வாய்ந்த பந்து வீச்சாளர் அக்தர். இவர் 1997ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தினை துவங்கிய அக்தர், இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 8,143 பந்துகளை வீசி 4,574 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவர் டெஸ்ட்டில் 174 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 12 முறை ஐந்து விக்கெட்டுகளும், இரண்டு முறை பத்து விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 


ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 163 ஒருநாள் போட்டிகாளில் 247 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில், நான்கு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதும் அடங்கும், அதேபோல் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 224 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அக்தர் 444 ரன்கள் வீழ்த்தியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண