ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம்  அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறவில்லை. 


 


இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. ஏன்னெறால் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அந்தத் தொடரில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


 


அந்தவகையில் வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பை தொடருக்கு பதிலாக ஜிம்பாவே செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இவர் இருந்தாலும் டி20 தொடரில் இடம்பெறுவது கடினம் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்திய அணி நிர்வாகம் அஷ்வின் போன்ற ஒரு அனுபவ பந்துவீச்சாளரை அணியில் எடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. 


 






ஏனென்றால் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்காது. இந்தச் சூழலில் அஷ்வின் தன்னுடைய அனுபவம் மற்றும் பந்துவீச்சு வேறுபாடுகளின் மூலம் பேட்ஸ்மேன்களை சிக்கலுக்கு உள்ளாக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அவரை தேர்வுக்குழுவினர் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடருக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச தொடர்களில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக அவருடைய உடற்தகுதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று மற்றொரு தரப்பு தெரிவிக்கின்றனர்.


தற்போது காயத்திலிருந்து குணம் அடைந்துள்ள வாஷிங்டன் சுந்தர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறார். இவர் லங்காஷேர் அணிக்காக விளையாடி வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நடப்பு ஜிம்பாவே தொடரில் இவர் அசத்தும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அத்துடன் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்படும் பட்சத்தில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண