இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் தற்போது இங்கிலாந்தில் ஹண்ட்ரடு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான வர்ணனையில் அவர் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில் நேற்று அவர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளார். அப்போது அவருடன் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை மற்றும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருடன் இணைந்து இந்தப் போட்டியை பார்த்துள்ளார். இது தொடர்பாக ரவிசாஸ்திரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். 






அதில், “கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் இரண்டு நபர்களுடன் கிரிக்கெட்டின் பிறப்பிடத்தில் நேற்று போட்டியை கண்டு ரசித்தேன்” எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவை பலரும் பார்த்து ரிட்வீட் செய்து வருகின்றனர். அத்துடன் பலரும் இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.  


இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடர் வெற்றிக்கு பிறகு அடுத்து ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். இந்திய அணிக்கு துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் திரும்பியுள்ளனர்.


15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும். 


சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண