டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து அவருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து வீரர்களுடன் ரிஷி சுனக்
ஆல்-ரவுண்டர் சாம் கரனின் இடது கை பந்துவீச்சை எதிர்கொண்ட அவர் சில நல்ல ஷாட்களை ஆடினார். அடுத்ததாக வந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் சுனக். ஜோர்டன் தனது நாட்டின் பிரதமர் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி அடைந்து குதித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேப்டன் ஜோஸ் பட்லர், தொடர் நாயகன் சாம் குர்ரன், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் ஆகியோருடன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், பில் சால்ட், கிறிஸ் வோக்ஸ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்லர் பகிர்ந்த பதிவு
பட்லர் சந்திப்பின் சில படங்களைப் பகிர்ந்து கொண்டு, "ஒரு சில வீரர்களுடன் டி20 உலகக் கோப்பையை நேற்று 10 டவுனிங் தெருவுக்கு எடுத்துச் சென்றது ஒரு பாக்கியம்!" என்று எழுதினார். இங்கிலாந்து டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்தது, அதுவும் அவர்களின் ஐரோப்பிய சகாக்கள் மற்றும் அண்டை நாடான அயர்லாந்திற்கு எதிரான தோல்வி ஆகும்.
டி20 உலகக்கோப்பை இருதிப்போட்டி
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், கரனின் பந்து வீச்சு மற்றும் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் முதல் T20I அரைசதத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பிறகு இரண்டாவது T20 உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இரண்டாவது அணியாக இங்கிலாந்து ஆனது.
வங்கதேசத்துடன் தோல்வியை தழுவிய அணி
அரையிறுதியில் இந்தியாவிற்கும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கும் எதிராக மிக சிறப்பாக ஆடி கோப்பையை வென்றனர். எனினும், அதன் பிறகு ஆடிய வங்கதேச தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. காயங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்த, நிலையில் டர்னிங் பிட்ச்களில் அனுபவம் இல்லாத நிலையும் அவர்களுக்கு எதிராக இருந்தது. ஒருநாள் போட்டியில் வில் ஜாக்ஸ் காயம் அடைந்ததை அடுத்து இங்கிலாந்து அந்த தொடரில் ஐந்து பேட்டர்களுடன் மட்டுமே விளையாடியது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 பதிப்பிற்காக இங்கிலாந்து வீரர்கள் இப்போது இந்தியாவுக்கு புறப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.