இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் முக்கியமான ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். ஆனால், அவரது உடல்தகுதி குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளது.




ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் ஹர்திக் பாண்ட்யா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த தொடரில் ஒரு போட்டியில்கூட பந்துவீசவில்லை. அவரது பேட்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் அவர் உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். அப்போதே அவரது தேர்வு குறித்து பலரும் விமர்சித்தனர். அந்த தொடரிலும் இந்தியா ஆடிய 5 போட்டிகளிலும் சேர்த்து 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். எந்த விக்கெட்டும் வீழ்த்தவில்லை.  சிறிய அணிகளுக்கு எதிராக மட்டும் சிறப்பாக பேட் செய்தார்.


அவரது மோசமான பார்ம், உடல்தகுதி காரணமாக அவரை நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், முடிவுற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கவில்லை. இந்திய அணி இந்த தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று ஹர்திக் பாண்ட்யா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது தென்னாப்பிரக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஆட உளளது. டிசம்பர் 17-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் ஆட உள்ளது.


ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்காக இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 532 ரன்களையும், 63 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1,286 ரன்களையும், 54 டி20 போட்டிகளில் ஆடி 533 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 57 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண