இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹேமங் பதானி, தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சம்பந்தப்பட்ட இதுவரை யாரும் கேள்விப்படாத சுவாரஸ்யமான தகவல் ஒன்றினை வெளிப்படுத்தினார். அதில் அவர் கூறியுள்ளது, டிராவிட் தனது சுவர் போன்ற டிஃபென்ஸால் எதிரணி அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்ததை கிரிக்கெட் பிரியர்கள் பார்த்திருந்தாலும், சென்னை லீக்கில் அவரது பலம் பற்றி பலருக்குத் தெரியாது, அங்கு பேட்டிங் செய்ய கிரவுண்டுக்குள் சென்றுவிட்டால் அவர் மணிக்கணக்கில் பேட்டிங் செய்வார் என கூறினார்.
மேலும் கூறிய பதானி, "ராகுல் அப்போது பெங்களூரில் வசித்து வந்தார், சென்னை லீக் கிரிக்கெட் சென்னையில் நடக்கிறது. மேலும் அவர் சென்னை லீக் விளையாடுவதற்காக சென்னைக்கு வருவார், இது இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான லீக்களில் ஒன்றாகும். அவர் உள்ளே வந்து சதம் விளாசிய பிறகும் சலிக்காமல் மேற்கொண்டு 100 ரன்களைக் குவிப்பார். ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் திறமையான ஒருவனாக இருந்தேன், ஆனால் நான் எல்லா பந்தையும் லாஃப்ட் செய்வேன். லாஃப்டிங் மற்றும் அவுட் லாங் ஆஃப் மற்றும் ஸ்டஃப்," என்று ஐபிஎல் உரிமையாளரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பகிர்ந்த வீடியோவில் பதானி கூறினார்.
மேலும் வீடியோவில், சதம் அடித்த பிறகும் டிராவிட் எப்படி தனது ஆட்டத்தில் இருந்து விலகாமல் இருந்தார் என்பதை பதானி வெளிப்படுத்தினார். "ராகுல் பந்தை தரையில்தான் அடிப்பார். அதிகமாக அவர் பந்தை மேலே தூக்கி அடிக்க மாட்டார். ஒரு கட்டத்தில் நான் சொன்னேன், ராகுல் உங்களுக்கு ஒரு சதம் கிடைத்தது, இரண்டு சதம் கிடைத்தது, நான்கு சதம் கிடைத்தது, உங்களுக்கு 5 சதமும் கிடைத்தது. என்ன நடக்கிறது ராகுல்? உங்களுக்கு சலிப்பு இல்லையா? " என அவர் கேள்வி எழுப்பியது குறித்தும் டிராவிட்டுடன் நடந்த வேடிக்கையான உரையாடலின் சம்பவத்தை பதானி விவரித்தார்.
பதானியின் கேள்விக்கு டிராவிட்டின் பதில் மிகவும் முக்கியமானது, சுமார், “6-6.5 மணி நேரம் பயணம் செய்ததால், 5 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற தெளிவான மனநிலையுடன், டிராவிட் விளையாட சென்னை வருவார் என்று கூறினார். மேலும், "ஹேமாங், இது எனக்கு மிகவும் எளிமையானது, அந்த நாட்களில் விமானங்கள் இல்லை, அவை மிகவும் விலை உயர்ந்தவை. நான் இரவு ரயிலில் செல்கிறேன். நான் 6-6.5 மணி நேரம் பயணம் செய்கிறேன். 3 மணி நேரம் பேட் செய்ய 6.5 மணி நேரம் பயணம் செய்து வந்து திரும்பிச் செல்ல விரும்பவில்லை. சதம் பெற 5 மணி நேரம் பேட் செய்யப் போகிறேன். அது எனக்கு மிகவும் எளிமையானது. நான் இவ்வளவு நேரம் பயணம் செய்து சிறப்பாக விளையாடுகிறேன் அதனாலே 5 மணி நேரம் மைதானத்தில் இருக்கிறேன்," என்று டிராவிட் கூறியதாக பதானி தெரிவித்தார்.
ராகுல் டிராவிட் பற்றிய யாரும் கேள்விப்படாத இந்த சுவாரஸ்ய நிகழ்வு கிரிக்கெட் வட்டாரத்தில், அனைவரையும் ஆச்சரியத்திலும் பலருக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.