முன்னாள் இந்திய கிரிக்கெட்டர ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர் ஒருவர் அவரை கடுப்பேற்றிய பதிவு வைரலாகி வருகிறது.
அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது:
2025 ஆண்டில், மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பத்ம விபூஷன் விருது 7 நபர்களுக்கும் , பத்ம பூசன் விருது 19 நபர்களுக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 நபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருதானது அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் தான் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ வழங்க்கப்பட்டது, அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதற்கு அஸ்வினும் தனது நன்றி தெரிவித்து வந்தார்.
இதையும் படிங்க: Mohammad siraj: காதல் வலையில் டிஎஸ்பி சிராஜ்? அந்த பெண் தான் இந்த பெண்ணா! உண்மை என்ன?
தனுஷ் வாழ்த்து:
பத்ம விருதுகள் வென்ற அஸ்வின் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் உயரிய விருதான பத்ம பூஷண் விருது பெற்ற அன்புள்ள அஜித் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறார்கள். அஸ்வின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழக கிரிக்கெட் வீரர். அந்தந்த துறைகளில் தேசத்தை பெருமைப்படுத்திய பத்ம விருது பெற்ற மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். என்று பதிவிட்டார்
இதையும் படிங்க; இதே வேலையா போச்சு.. என்ன அதிகாரம் இருக்கு! மிஷ்கினை கிழித்து தொடங்கவிட்ட விஷால்
அதற்கு அஸ்வின் தனுஷுக்கு நன்றி என்று கூறி பதிலளித்த நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் நன்றி சொல்ல விரும்பினால், ரோஹித் சர்மாவுக்கு என்று சொல்லுங்கள் என்று கமெண்ட் செய்து இருந்தார். அதனால் கடுப்பன அஸ்வின் ”டேய் பைத்தியம்” என்று பதிவிட்டு கமெண்ட் செய்தது தற்போது வைரலாகி வருகிறது.