ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இணையாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் சமமான சம்பளம் தருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.


இங்கிலாந்துக்கு முன்னதாக, நியூசிலாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற முன்னணி அணிகள் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு சமமான சம்பளத்தை தருவதாக அறிவித்தது. இது கிரிக்கெட்டில் மிகப்பெரிய முன்னெடுப்பு மற்றும் வளர்ச்சிக்கான பாதையாக பார்க்கப்படுகிறது. 


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த ஆஷஸ் தொடருக்கு பிறகு, இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. 


இதன்மூலம், உயர்த்தப்பட்ட இந்த போட்டிக்கான கட்டணம் வருகின்ற இலங்கை தொடரில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






இதுகுறித்து இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், “பெண்கள் விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவது மிகவும் முக்கியமானது. எங்களுக்கும் சமமான சம்பளம் என்ற நிலை உணர்வதே அருமையானது. நாங்கள் தொடர்ந்து விளையாட்டை வளர்த்து வருவதாக், இது பெண்கள் சீனியர் மற்றும் இளம் கிரிக்கெட்டர்களுக்கு அதிகளவில் ஈர்க்கும் விளையாட்டாக மாறும் என நம்புகிறேன்.” என்றார்.


இங்கிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் கோல்ட் கூறுகையில், “ மகளிர் ஆஷஸ் தொடர் மூலம் இங்கிலாந்தில் பெண்கள் கிரிக்கெட் எவ்வாறு வேகமான வளர்ந்து வருகிறது என்று தெரிகிறது. வரும் காலங்களில் வருவாயை விட நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம். அந்த வகையில், போட்டிக் கட்டணத்தை சமன் செய்வது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. 


நாங்கள் தொடர்ந்து பெண்கள் கிரிக்கெட்டை வளர்த்து வருவதால், பெண்கள் கிரிக்கெட் கட்டமைப்புகள் முழுவதும் பரந்து விரிந்து வருகிறோம். இதன்மூலம், செழிப்பான, லாபம் ஈட்டும் மற்றும் எதிர்காலத்தை நிரூபிக்கும் விளையாட்டை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என தெரிவித்தார்.


இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெண்கள் உள்நாட்டு அணிகளுக்கான சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல் ஹண்ட்ரட் லீக் போட்டியில் வீராங்கனைகளுக்கு ஊதியம் கடந்த ஆண்டை விட இருமடங்காக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.