அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து 9 உலகக் கோப்பை தொரில் பங்கேற்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து 9 உலகக் கோப்பை வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான், நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த 6 வீரர்கள் அணியில் நீடிக்கின்றன, இதில் கேப்டன் ஜோஸ் பட்லர், சுழற்பந்து வீச்சாளர் லியாம் லிவிங்ஸ்டோன், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், பிரண்டன் கார்ஸ் மற்றும் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் ஆகியோர் அடங்குவர்.
டிசம்பர் 3 முதல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 12ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி - ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், பிரெண்டன் கார்ஸ், ஜாக் க்ராலி, சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஒல்லி போப், பில் சால்ட் , ஜோஷ் டங் மற்றும் ஜான் டர்னர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி - ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், சாம் குர்ரன், பென் டக்கெட், வில் ஜாக், லியாம் லிவிங்ஸ்டோன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங்கு , ரீஸ் டோப்லி, ஜான் டர்னர் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அட்டவணை
3 டிசம்பர் - 1வது ஒருநாள் (ஆண்டிகுவா)
6 டிசம்பர் - 2வது ஒருநாள் (ஆண்டிகுவா)
9 டிசம்பர் - 3வது ஒருநாள் (பார்படாஸ்)
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் அட்டவணை
டிசம்பர் 12- முதல் டி20
டிசம்பர் 14- 2வது டி20
டிசம்பர் 16- 3வது டி20
டிசம்பர் 19- 4வது டி20
டிசம்பர் 21 - ஐந்தாவது டி20