2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று, இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்பினார். இங்கிலாந்து நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்டோக்ஸ் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தயாராகிவிட்டார் என முன்னதாக பிரபல ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. 


ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு மீண்டும் பென் ஸ்டோக்ஸ் 50 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அதில் தெரிவிக்கையில், “ 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணிக்காக வென்று கொடுத்த பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு குறித்து யு-டர்ன் எடுக்க தயாராக உள்ளார். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார். இதற்காக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் இவர் விளையாட மாட்டார்.  இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லருடன் நீண்ட நாட்கள் நடந்த ஆலோசனைக்கு பிறகு தனது முடிவை மாற்றியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்” என தெரிவித்துள்ளது. 


2019ஆம் ஆண்டு பென் ஸ்டோகிஸின் அற்புதமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது, கடந்த ஆண்டு தனது உடற்தகுதி காரணமாக ஒருநாள் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.  2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்தை சாம்பியனாக்குவதில்  ஸ்டோக்ஸ் முக்கிய பங்கு வகித்தார்.






இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார், அதற்காக அவருக்கு 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஸ்டோக்ஸ் மீண்டும் இங்கிலாந்துக்கு முக்கிய அங்கமாக இருக்க முடியும். ஸ்டோக்ஸ் உலக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது இப்போது சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்டோக்ஸ் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஜூலை 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். 


பென் ஸ்டோக்ஸ்: 


இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதுவரை இவர் 97 டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 43 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 


97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6117 ரன்களும், 197 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து, 90 ஒருநாள் இன்னிங்ஸ்களில் களமிறங்கி 2924 ரன்களும், 74 விக்கெட்களையும் எடுத்துள்ளார், அதேபோல், 43 சர்வதேச டி20 போட்டிகளில் 585 ரன்கள் மற்றும் 26 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.


 இந்தநிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து இடம் அளித்துள்ளது.


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி , மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்


இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோஷ் டோங், ஜான் டர்னர், லூக் ட்ரீ