இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் பந்துவீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் இந்த மாபெரும் சாதனையை பிராட் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் பிராட் 13 ஓவர்கள் வீசி 2 ஓவர்களை மெய்டனாக வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மெக்ராத்தை பின்னுக்குத் தள்ளி சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
36 வயதான ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 566 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 121 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும். 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பிராட் அறிமுகமாகியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 667 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
6வது இடத்தில் மெக்ராத்தும், 7வது இடத்தில் வால்ஷூம், 8வது இடத்தில் அஸ்வினும், 9வது இடத்தில் டேல் ஸ்டெயினும், 10வது இடத்தில் நாதன் லயனும் உள்ளனர். மேலும், இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.
மேலும் படிக்க : Watch Video: இலங்கை தேசிய கொடியுடன் மைதானத்தில் நின்ற கம்பீர்..! சூப்பர்ஸ்டார் அணி என புகழாரம்..!
மேலும் படிக்க : Watch Video: நீண்ட மாதங்களுக்கு பிறகு புன்னகை..! ஆசிய கோப்பை வென்ற மகிழ்ச்சியில் வீதிகளில் கொண்டாடித் தீர்த்த இலங்கை மக்கள்..!