சாதனை படைத்த ஜோ ரூட்:


முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான அணி 556 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராலி 78 ரன்களும், ஆலிவ் போப் டக் அவுட்டாகியும் வெளியேறினார்.




இந்நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். இச்சூழலில், ஜோ ரூட் 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி இருக்கிறார். இதில் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் அவர் எத்தனை டெஸ்ட் சதங்களை விளாசி இருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம்:


எங்கே? எத்தனை சதம்:


அதாவது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் மொத்தம் 21 சதங்களை விளாசி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 4 சதங்களை பதிவு செய்திருக்கிறார் ஜோ ரூட்.


அதேபோல், இந்திய மண்ணில் 3 சதங்களை விளாசி இருக்கும் ஜோ ரூட் இலங்கை மண்ணில் 3 சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். மேலும், நியூசிலாந்து மண்ணில் 2 சதங்களும்,தென்னாப்பிரிக்க மண்ணில் 1 சதமும், தற்போது நடைபெற்ற போட்டியின் மூலம் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக தன்னுடைய முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஜோ ரூட். 





சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை 2012 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் 17 சதம் விளாசி இருக்கிறார். அதேபோல்,2021 முதல் 2024 ஆம் ஆண்டிற்குள் அதிரடியாக 18 சதங்களை பதிவு செய்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்.