இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் போது கேப்டன் பும்ரா பேட்டிங்கில் அசத்தினார். 


 


இந்நிலையில் அவர் பிராட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் பும்ரா 35 ரன்கள் விளாசினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் உள்பட மொத்தம் 35 ரன்கள் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தச் சாதனையை முறியடித்த பும்ராவிற்கு பலரும் பாராட்டி தெரிவித்து வந்தனர். 


 






அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். அதில், “இது யுவராஜ் சிங்கா? இல்லைனா பும்ராவா? 2007ஆம் ஆண்டு நினைவு எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது” எனப் பதிவிட்டிருந்தார். சச்சின் டெண்டுல்கரின் இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பதிவிற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பதில் பதிவு செய்துள்ளார். 


 


அதில், யுவராஜ் சிங் சிரிப்பது ஒரு ஸ்மிளியை பதிவிட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் போது பிராட் வீசிய ஓவரின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் ஒரே ஓவரில் 36 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த சம்பவத்தை மேற்கொள் காட்டி சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருந்தார். ரசிகர்கள் பலரும் அந்தச் சம்பவத்தை நினைவுக் காட்டி பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  


நேற்றைய போட்டியில் பேட்டிங்கிற்கு பின்பு இந்திய கேப்டன் பும்ரா பந்துவீச்சிலும் அசத்தினார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பும்ரா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இங்கிலாந்து அணி இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 332 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண