அதிக எடை மற்றும் ஒழுக்கமின்மையால் ரஞ்சிக்கோப்பையின் மும்பை அணியில் இருந்து ப்ரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

அதிக உடல் எடை:

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் ப்ரித்வி ஷா. கடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய கிரிகெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றெல்லாம் ரசிகர்கள் இவரை புகழ்ந்தனர்.

ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா, 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவ்வப்போது சிறந்த முறையில் விளையாடி கவனத்தை ஈர்ப்பார்.

Continues below advertisement

இச்சூழலில் இவரது உடற்தகுதி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு கடும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் தற்சமயம் அவரது மோசமான உடற்தகுதியின் காரணமாக நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடி வரும் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ப்ரித்வி ஷாவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் உடல் எடை மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.

இதனால், அணியில் இருந்து ப்ரித்வி ஷாவை நீக்கி அவருக்கு பாடம் கற்பிக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.போட்டிக்கு முந்தைய வலைப்பயிற்சிகளில் ப்ரித்வி ஷா சரியாக கலந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது உடற்தகுதியும் அணித் தேர்வர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

மும்பை அணியில் இருந்து நீக்கம்:

மூத்த கிரிக்கெட் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்கூர் போன்றவர்கள்கூட வலைப் பயிற்சியில் முறையாக கலந்து கொள்ளும் நிலையில் ப்ரித்வி ஷா கலந்து கொள்ளாதது மேலும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இவரை நீக்குவது நிர்வாகம் மற்றும் அணித் தேர்வர்களில் கோரிக்கை மட்டுமல்ல பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டனும் சேர்ந்து ப்ரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதாலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய ப்ரித்வி ஷா அதில், 7,12,01 மற்றும் 39 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.