இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார். அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் தோனி தொடர்பான படங்கள் வந்தால் அது மிகவும் வைரலாகும்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி தோனி இன்று 12வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதன்காரணமாக தோனியின் ரசிகர்கள் அவர்கள் இருவர் தொடர்பான படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இந்தப் படங்களை பதிவிட்டு அவர்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தப் படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தோனி மற்றும் சாக்ஷி ஆகியோருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸிவா என்ற மகள் பிறந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்