Devdutt padikkal : டக் அவுட்டில் இப்படி ஒரு சாதனையா! படிக்கலுக்கு இது தேவையா..

Devdutt padikkal: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் விளையாடி டக் அவுட் ஆன வீரர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் தேவ்தத் படிக்கல். 

Continues below advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் விளையாடி டக் அவுட் ஆன வீரர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் தேவ்தத் படிக்கல். 

Continues below advertisement

பெர்த் டெஸ்ட்: 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்காக இந்த போட்டியில் ஹர்சித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுக வீரர்களாக களமிறங்கினர். 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆனால் 3 வது ஓவரில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

படிக்கலின் மோசமான சாதனை:

அடுத்தாக மூன்றாவது வீரராக தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். மிகுந்த பொறுமை மற்றும் எச்சரிகையுடன் ஆடி வந்த அவர் 23 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். டக் அவுட் ஆனது மட்டுமில்லாமல் ஒரு மோசமான சாதனையையும் படிக்கல் முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் இந்திய வீரரின் ரன் எதுவும் அடிக்காமல் அதிக பந்துகளை சந்தித்து டக் அவுட்டானார். 24 வயதான அவர் பெர்த் டெஸ்டில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 23 பந்துகளை சந்தித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன் 1948ல் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (22 பந்துகள்) தத்தாத்ரேயா கஜானன் பட்கர் என்பவர் தான் ஒரு இந்தியரின் மிக நீண்ட டக் அவுட்டை பதிவு செய்திருந்தார். அந்த சாதனையை 76 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கல் தற்போது முறியடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இது வரை இந்திய வீரர்கள் 33 முறை டக் அவுட் ஆகியுள்ளனர் என்கிற மோசமான ரெக்கார்டும் இந்திய அணி வசம் உள்ளது. 

இந்திய அணி தடுமாற்றம்: 

இந்த போட்டியில் இந்திய உணவு இடைவேளை வரை 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola