DC-W vs MI-W Live: டெல்லியை வீழ்த்தி டேபிள் டாப்பரை தக்கவைத்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ்..!
DC-W vs MI-W, WPL 2023 LIVE Score: மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொள்கின்றன. இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடு தளத்தில் இணைந்து இருங்கள்.
13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்து இருந்தது.
நிலையாக ஆடிவந்த மேத்யூஸ் 31 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த யஸ்திகா 31 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மட்டும் 8 பவுண்டரிகளை பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6.1 ஓவரில் மும்பை அணி 51 ரன்கள் குவித்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
17வது ஒவரின் கடைசிப் பந்தில் ராதா யாதவ் அவுட் ஆகி வெளியேறினார். தற்போது டெல்லி அணி 102-9 என்ற நிலையில் உள்ளது.
17வது ஓவரின் 3 பந்தில் டெல்லி அணி தனது 100வது ரன்னை எடுத்துள்ளது.
16.2 ஓவரில் டெல்லி அணி தனது 8வது விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது டெல்லி அணி 98- 8 என்ற நிலையில் உள்ளது.
டெல்லி அணியின் முதல் சிக்ஸர் 16வது ஓவரின் கடைசிப் பந்தில் ராதா யாதாவால் அடிக்கப்பட்டுள்ளது.
15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களைச் சேர்த்துள்ளது.
13 ஓவரின் 4வது பந்தில் மேத்யூஸ் மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். தற்போது 13.4 ஓவரில் 84-7 என்ற நிலையில் டெல்லி அணி உள்ளது.
13 ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்த நிலையில், 14 ஓவரின் முதல் பந்தில் மும்பை அணி மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்து டெல்லி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டெல்லி அணி 84-6 என்ற நிலையில் உள்ளது.
இஷாக் பந்து வீச்சில் 13 ஓவரில் ஜெமிமா அவுட் ஆன நிலையில், கேப்டன் லேனிங்கும் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இருந்த இவர்களை இஷாக் வெளியேற்றியுள்ளார்.
சிறப்பாக விளையாடி டெல்லி அணிக்கு நம்பிக்கை அளித்த ஜெமிமா இஷாக் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார். இவர் 18 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
லேனிங் மற்றும் ஜெமிமா 33 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்துள்ளனர்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. போட்டி மெல்ல மெல்ல டெல்லியின் வசம் வருகிறது.
11வது ஓவரின் முதல் மூன்று பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது ருத்ரதாண்டவத்தை லேனிங் துவங்கியுள்ளார். 11 ஓவர்கள் முடிவில் டெல்லி 72-3.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவந்த டெல்லி அணி 9 ஓவர்கள் முடிவில், 51 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியதும் 8 ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகள் பறக்கவிட்டு அதகளப்படுத்தினார்.
4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் மரிசென்னே கேப் வாங் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார்.
டெல்லி அணியின் லேனிங் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்ஸியை மும்பை அணி சிறப்பான பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கினால் வெளியேற்றியுள்ளது.
ஐந்து ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
நான்கு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் குவித்துள்ளது.
லேனிங் அடித்த பந்தை மும்பை வீராங்கனை மிஸ் செய்துள்ளார்.
இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ஷேஃபாலி வர்மா போல்ட் ஆகி வெளியேரியுள்ளார். தற்போது டெல்லி அணி 8-1 என்ற நிலையில் உள்ளது.
போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்து பவுண்டரிக்கு விரட்டப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Background
DC-W vs MI-W, WPL 2023 LIVE Score: மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொள்கின்றன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளி பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும் என்பதால், டெல்லி இந்த போட்டியில் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும். அதேபோல் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ள மும்பை அணிக்கு அதனை தக்கவைத்துக் கொள்ள ஒட்டுமொத்த பலத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று (மார்ச் 9) இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -