WPL Season 1 Winner: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கோப்பையை வென்று வரலாறு படைத்த மும்பை..!

WPL 2023 Final, MI-W vs DC-W: மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.

Continues below advertisement

மகளிர் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள பார்பவுர்ணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன் படி டெல்லி அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான மெக் லேனிங்கும் ஷேஃபாலி வர்மாவும் தொடங்கினர். 

Continues below advertisement

இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தினை எதிர்கொண்ட ஷேஃபலி வர்மா முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி அதகளப்படுத்தினார். தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டுவார் என நினைத்துக் கொண்டு இருக்கையில்  அடுத்த பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத டெல்லி அணிக்கு இரண்டாவது ஓவரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் கேப்ஸி ரன் ஏது எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதன் பின்னர் மெக் லேனிங் உடன் கைகோர்த்த ஜெமிமா 3வது ஓவரில் அதிரடியாக எதிர்கொண்டு பவுண்டரிகளை விளாசிய அவர் 4வது ஓவரினை வீசிய இஸி வாங்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணியின் முதல் மூன்று விக்கெட்டுளை வீழ்த்தினார். இந்த மூன்று விக்கெட்டுகளும் ஃபுல்டாஸ் பந்தில் எடுக்கப்பட்டது தான். அதன் பின்னரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய டெல்லி அணி பவர்ப்ளே முடிவில் 3விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்து இருந்தது. 

அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தினை டெல்லி அணியின் கேப்டன் கைவிடவில்லை. இவருடன் கைகோர்த்த மாரிசான் கேப் நிதானமாக ஆடிவந்தார். 21 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் மாரிசான் கேப் வெளியேற, இங்கு தொடங்கியது டெல்லி அணியின் வீழ்ச்சி. அதன் பின்னர் டெல்லி அணியால் மீளவே முடியவில்லை. மரிசான் கேப் அவுட் ஆன போது டெல்லி அணி 73 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், 14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்தது. 

தடுமாறி வந்த டெல்லி அணிக்கு 10வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் சிறப்பாக விளையாடி அணியை 100 ரன்களை கடக்க வைத்ததுடன் 24 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தனர்.  இறுதியில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி சார்பில் இஸி வாங் 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

அதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிதானமக ஆடியது. அந்த அணி பவர்ப்ளேவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்த மும்பை அணி அதன் பின்னர், ஜோடி சேர்ந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஷிவர் பர்ண்ட் இருவரும்  மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் நிதானமாக ஆடி வந்தனர். கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாசி வந்தனர். இருவரும் மூன்றாவது விக்கெடுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிவந்த ஷிவர் ப்ரண்ட் அரைசதம் விளாசினார். இறுதி வரை களத்தில் இருந்த அவர் 55 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Continues below advertisement