ஐ.பி.எல் 2024:


இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதுஉலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம்ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில்மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டதுஅதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டதுடெல்லி கேபிட்டல்ஸ்குஜராத் ஜெயன்ட்ஸ்மும்பை இந்தியன்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதுஇந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் இன்று தொடங்கியதுஇந்த தொடரிலும் டெல்லிகுஜராத்மும்பைபெங்களூர்யு.பி.

  ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.


 


அந்த வகையில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினஅதன்படிடாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.  இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர்மெக் லானிங் உடன் ஜோடி சேர்ந்தார் ஆலிஸ் கேப்ஸிஇருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள்இதில்மெக் லானிங் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் பறக்கவிட்டு மொத்தம் 31 ரன்கள் எடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஆலிஸ் கேப்ஸியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். அந்த வகையில் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஆலிஸ் கேப்ஸி. அந்தவகையில் மொத்தம் 53 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 75 ரன்களை குவித்தார். அதேபோல் மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதனிடையே சதம் விளாசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஆலிஸ் கேப்ஸி 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.


 


மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி:


172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி  களம் இறங்கியது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ஹேலி மேத்யூஸ் டக் அவுட் முறையில் வெளியேற மறுபுறம் அதிராடியாக விளையாடினார் யாஸ்திகா பாட்டியா.


பின்னர் வந்த நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க  யாஸ்திகா பாட்டியாவுடன் ஜோடி சேர்ந்தார் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.  இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அந்த வகையில் 45 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 57 ரன்களை குவித்தார். அப்போது அருந்ததி ரெட்டி வீசிய பந்தில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டியபோது 19 வது ஓவரின் 5வது பந்தில் அவுட் ஆனார் ஹர்மன்ப்ரீத் கவுர்.


கடைசி பந்தில் சிக்ஸர்:





அப்போது ஒரு பந்தில் 5 ரன்கள் மும்பை அணிக்கு தேவை பட்டது. கடைசி ஓவரின் கடைசி பந்தை வீசினார் ஆலிஸ் கேப்ஸி. அப்போது களத்தில் நின்ற சஜீவன் சஜனா கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.