ஆஸ்திரேலிய அணி:


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. அதன்படி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கடைசி போட்டி நாளை (ஜனவரி 3) ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தான் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.


முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8695 ரன்கள் குவித்துள்ளார்.


அதுமட்டும் இன்றி ஒருநாள் போட்டிகளில் 161 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6932 ரன்களையும் குவித்திருக்கிறார். இது தவிர்த்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 ஆட்டங்களில் விளையாடி 2894 ரன்களை குவித்துள்ளார்


கடைசி டெஸ்ட் போட்டி:


இந்நிலையில் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு வேறு வழியில்லை என்பதால் கடைசி முயற்சியாக இந்த வீடியோவை பதிவிடுகிறேன்.


எனது பச்சை நிற தொப்பி எனது லக்கேஜில் இருந்து காணாமல் போயுள்ளது. சில தினங்களுக்கு முன் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு எனது லக்கேஜ் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது காணாமல் போயிருக்கலாம்.






கேமராவில் செக் செய்து பார்த்தபோது போதுமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. எனது தொப்பியை யாராவது எடுத்திருந்தால் தயவு செய்து கொடுத்து விடுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. என்னிடம் மற்றொரு பேக் உள்ளது. அதனை உங்களுக்குப் பரிசாக கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய தொப்பியை மட்டும் கொடுத்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: MS Dhoni: "ஒரு முறை கூட முடியல" தோனியிடம் எடுபடாத ஜாம்பவான் நாதன் லயனின் பவுலிங்!


 


மேலும் படிக்க: Tamil Thalaivas: தமிழக வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்குமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் விருப்பம் இதுதான்!