ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் உள்ள காலே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டத்தை தொடங்கிய இலங்கையின் தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆட்டத்தின் 30வது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் வீசினார். அப்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் கருணரத்னே பந்தை தனது பேட்டால் தடுத்தார்.




பந்து கருணரத்னேவின் பேடில்( கால்காப்பு) பட்டதாக கருதி விக்கெட்கீப்பர், நாதன் லயன் மற்றும் வீரர்கள் அம்பயரிடம் எல்.பி.டபுள்யூ விக்கெட் கேட்டனர். ஆனால், பந்து பேட்டில் பட்டு பின்னரே கால்காப்பில் பட்டிருந்ததை. இதை விக்கெட்கீப்பர் அருகில் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த டேவிட் வார்னர் கவனித்துள்ளார்.






மேலும், கருணரத்னே பேட்டில் பட்டு மேலே வந்த பந்து தரையில் விழும்முன் கண்ணிமைக்கும் நேரத்தில் டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். வீரர்கள் அனைவரும் எல்.பி.டபுள்யூவிற்கு அப்பீல் செய்ய டேவிட் வார்னர் மட்டும் துல்லியமாக கணித்து அருமையாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து இலங்கை கேப்டன் கருணரத்னேவை அவுட்டாக்கி அசத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக விக்கெட்கீப்பர் டிக்வெல்லா 58 ரன்கள் விளாசினார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி வரும் ஆஸ்திரேலியா 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. டேவிட் வார்னர் 25 ரன்களுக்கும், லபுசகனே 13 ரன்களுக்கும் அவுட்டாகினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண