இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒரு நாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி,

ஒருநாள் போட்டிகளுக்கான தேதிகள்

முதல் ஒருநாள் போட்டி எஸ்.பி.என்.சி.எஸ் மிர்ப்பூர் மைதானத்தில், ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி எஸ்.பி.என்.சி.எஸ் மிர்ப்பூர் மைதானத்தில், ஆகஸ்ட் 20ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

டி20 போட்டிகளுக்கான தேதிகள்:

முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிர்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிர்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.