ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கும் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் ஆகும். இந்த தொடருக்கு என்று இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஏலம் மூலமாக வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேர்வு மூலம் தொடங்கப்பட்ட ஐபிஎல் பின்னர், வீரர்கள் தக்க வைப்பு, மினி ஏலம், ட்ரேட் என்று பல முறைகளில் வீரர்கள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த சூழலில் 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஜடேஜா, சாம்கரனை ராஜஸ்தான் அணிக்கு அளித்துவிட்டு சாம்சனை பரிமாற்றம் செய்து கொண்டது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், 2026ம் ஆண்டு சென்னை அணியின் வீரர்கள் பட்டியலை கீழே காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
பேட்ஸ்மேன்கள்:
ருதுராஜ் கெய்க்வாட்,ஆயுஷ் மாத்ரே,டெவால்ட் ப்ரெவிஸ்
விக்கெட் கீப்பர்கள்:
எம்எஸ்தோனிசஞ்சு சாம்சன்உர்வில் படேல்
ஆல்ரவுண்டர்:
ஷிவம் துபேஜேமி ஓவர்டன்ராமகிருஷ்ணா கோஷ்
பந்துவீச்சாளர்கள்:நூர் அகமதுகலீல் அகமதுஅன்ஷுல் கம்போஜ்நாதன் எல்லீஸ்ஸ்ரேயாஸ் கோபால்முகேஷ் செளத்ரிகுர்ஜ்ப்னீத் சிங்
தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ப்ரெவிஸ், ஓவர்டன், நூர் அகமது, நாதன் எல்லீஸ் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, ப்ரெவிஸ், சாம்சன், ஷிவம் துபே, தோனி பேட்ஸ்மேன்கள் ஆகும்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
சென்னை அணி நிர்வாகம் தனது அணியில் இருந்து ஜடேஜாவை ட்ரேட் மூலமாக ராஜஸ்தானுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. அவருடன் சேர்த்து சாம் கரனையும் விட்டுக்கொடுத்துள்ளனர். மேலும், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, பதிரானா, கான்வே ஆகியோரையும் விடுவித்துள்ளனர்.
43 கோடி ரூபாய் ஏலம்:
சென்னை அணியின் கைவசம் ரூபாய் 43 கோடி மினி ஏலத்திற்கு உள்ளது. அவர்கள் விடுவித்த வீரர்களில் பதிரானா, கான்வே, ரவீந்திராவை தங்களது கையிருப்பு தொகை மூலமாக மீண்டும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த சீசனில் இவர்கள் 3 பேரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மற்ற அணியைப் போல அணியில் இளம் வீரர்களின் தாக்கத்தை அதிகரிக்கவே சென்னை அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
சென்னை அணி தற்போது தக்க வைத்துள்ள வீரர்களில் முன்னாள் கேப்டன் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக ஆடிய அனுபவம் கொண்ட சாம்சன், ஷிவம் துபே, இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
தற்போதைய சென்னை அணியில் பந்துவீச்சு பலவீனமாகவே உள்ளது. கலீல் அகமது, நூர் அகமது ஆகியோர் மட்டுமே முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இதனால், சென்னை அணி பந்துவீச்சிற்கே வரும் ஏலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று கருதப்படுகிறது.