கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது இந்திய வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வருகின்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர். இந்தநிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் உடற்தகுதி மேம்படுத்தல்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர்களுக்காக நிர்வாகம் இன்னும் காத்திருப்பதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தெரிவித்துள்ளார்.
ருதுராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சாஹருக்கு தொடை எலும்பு கிழிந்தும் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஆக்ஷனிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், முழுப் போட்டியிலும் இல்லாவிட்டால், ஐபிஎல்லின் முதல் கட்டப் போட்டியை சாஹர் இழக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சூரத்தில் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் ருதுராஜ் சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டார். அதேபோல், சிஎஸ்கே அணியால் ரூ.14 கோடிக்கு சாஹர் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சிஎஸ்கே அணிக்கு அவர்கள் வருவார்களா என்ற ரசிகர்களின் கேள்விக்கு சிஇஓ காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார். "அவர்களின் தற்போதைய உடற்தகுதி நிலை குறித்து எங்களுக்குத் தெரியாது, மேலும் அவர்கள் எப்போது அணியில் சேருவார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியாது. வெளிப்படையாக நாங்கள் பிசிசிஐ கேட்டபோது, அவர்கள் மேட்ச்-ஃபிட் ஆனவுடன் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், அவர்கள் தற்போது என்சிஏவில் உள்ளனர்" என்றும் தகவல் தெரிவித்தனர்.
காயம் அடைந்த அனைத்து இந்திய வீரர்களும் என்சிஏவில் இருக்க வேண்டும் மற்றும் ஒருமுறை பல்வேறு உடற்தகுதி சோதனைகளில் பங்கேற்ற பிறகு அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டும். அதன் பிறகே அவர்கள் இந்திய அணிக்கு திரும்புவார்கள். காயங்களுக்கு சிகிச்சையளிப்பவர்களில், மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சூர்யகுமார் யாதவும் அடங்குவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்