இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் கொண்ட போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்குகிறது. டி20 தொடர் ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.


இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாட இந்திய அணி கவுகாத்தி சென்றடைந்தது. இந்திய அணி கவுகாத்தி சென்றதை அறிந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய வீரர்களை காண மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு வளையத்துக்குள் நின்று தங்களுக்கு பிடித்த வீரர்களை கண்டு மகிழ்ந்தனர். 


தொடர்ந்து ரோகித் சர்மாவின் சில ரசிகர்கள் அவரை சந்திக்க விரும்புவதை அறிந்த கேப்டன் ரோகித சர்மா, அவர்களை காண சென்றார். அப்போது, ரோகித் சர்மாவை கண்ட 15 வயது சிறுவன் அவரை கண்டதும் கதறி அழ தொடங்கினார். இதை பார்த்த ரோகித் சர்மாவும் அழுது கொண்டிருந்த சிறுவனுக்கு அருகில் சென்று சமாதானப்படுத்தினார். அது மட்டுமல்லாமல், சிறுவனுடன் இணைந்து புகைப்படமும் எடுத்து கொண்டார். 






இதில், ரோகித் சர்மா குழந்தையை சமாதானம் செய்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முதலில் சிறுவன் அழுவதை கண்ட, ரோகித் சர்மா சிறுவனின் அருகில் செல்கிறார். அந்த நேரத்தில் அழுது கொண்டிருந்த சிறுவன், ரோகித்தை கண்டதும் வேகமாக கண்ணை துடைக்கிறான். 


அருகில் சென்ற ரோகித், சிறுவனின் கன்னத்தை கிள்ளி எதற்கு அழுகுற.. வா ஒரு போட்டோ எடுத்துகலாம். இதைகேட்டதும் ஆனந்ததில் அழுது கொண்டிருந்த சிறுவன் அமைதியாகிவிட்டான். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். 


இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியுடன் ரோஹித் சர்மா திரும்புகிறார். காயம் காரணமாக வங்கதேசத்தில் விளையாடியபோது டி20 தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இந்த போட்டியுடன், இந்திய அணியின் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என்று கருதப்படுகிறது.


இரு அணிகள் விவரம் பின்வருமாறு: 


இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன். சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.


இலங்கை: பாத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அஸ்லங்கா, தனஞ்சய் டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சமிக கருணாரத்னே, மகேஷ் தீக்ஷ்னா, தில்ஷன் மதுஷங்க, லஹிரு குமார, அஷேன் பண்டார, நுவா, பிரமோத் பண்டார, நுவா மதுஷன், துனித் வெல்லலெஸ், கசுன் ராஜித, ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் சதீர சமரவிக்ரம.