ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அந்தவகையில் 48 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 7 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி, இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 


இதனிடையே, இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் நடைபெற்ற சில வரலாற்று சுவாரஸ்யங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


உலகக் கோப்பையில் இலங்கையின் அதிக ரன்கள் :


இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது. அதேபோல், கடந்த 1996 ஆம் ஆண்டு இலங்கையின் கண்டியில் நடைபெற்ற போட்டியில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 398 ரன்கள் அடித்தது. 


2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது  ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள்  இழப்பிற்கு 363 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.


அதேபோல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. இவை அனைத்தும் உலகக் கோப்பை போட்டிகள் இலங்கை அணியின் அதிக பட்ச ரன்கள் ஆகும்.


பாகிஸ்தான் அணிக்கு எதிராக:


உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்தெந்த அணி அதிக ரன்கள் அடித்துள்ளன என்று பார்த்தால்,  அதில் இலங்கை அணியே முதல் இடத்தில் இருக்கிறது. 


அந்த வகையில் நடப்பு 2023 உலகக் கோப்பை போட்டியின் இன்றைய (அக்டோபர் 10) போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்ததே ஆகும். அதேபோல், கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்தது.


2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளுக்கு 334 ரன்கள் எடுத்ததும், கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பரம எதிரியாக பார்க்கப்படும் இந்திய அணி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 336 ரன்கள் எடுத்தும் தான் ஒரு அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.


பார்ட்னர்ஷிப் சதம்:


உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியினர் அடித்துள்ள பார்ட்னர் ஷிப் சதங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்:


1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி பார்ட்னர்ஷிப் சதம் அடித்துள்ளது. அதேபோல், 2015 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராகவும், அதே ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் பார்ட்னர்ஷிப் சதம் அடிக்கப்பட்டுள்ளது. 


அந்த லிஸ்ட்டில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியும் இணைந்துள்ளது. அதன்படி, குசல் மெண்டிஸ் 122 ரன்களும், சதீர சமரவிக்ரமா 108 ரன்கள் என பார்ட்னர்ஷிப் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ENG vs BAN Match Highlights:ருத்ர தாண்டவம் ஆடிய டேவிட் மலான்! வங்கதேசத்தை ஊதித்தள்ளிய இங்கிலாந்து!


 


மேலும் படிக்க: SL vs PAK World Cup 2023: மென்டிஸ் சமரவிக்ரம அதிரடி சதம்; பவுலிங்கில் பஞ்சரான பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு