வான்கடே மைதானம்:


கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் போல் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். எத்தனையோ வீரர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் ரசிகர்களின் நெஞ்சில் சச்சின் டெண்டுல்கருக்கு என்று ஒரு தனி இடம் இருக்கும். தான் சர்வதேச போட்டிகளில் விளையாடிய போது ரசிகர்களால் எப்படி கொண்டாடப்பட்டாரோ அதேபோல் ஓய்விற்கு பிறகும் ரசிகர்களால் போற்றப்பட்டே வருகிறார். அந்தவகையில் தனக்கு தோன்றுவதை சமூகவலைளங்களில் பதிவிட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில்தான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சச்சின் டெண்டுல்கர் தனக்கு மிகவும் நெருக்கமான மும்பை வான்கடே மைதானம் தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்


இரண்டாவது வீடு:


அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “10 வயது சிறுவனாக வான்கடே மைதானத்தின் மாயாஜாலத்தை முதன்முறையாக நான் பார்த்தபோது, ​​ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்திற்கு எதிராக மும்பை அணிக்காக நான் அறிமுகமாகிறேன் என்று எனக்குத் தெரியாது. எனது தொழில் வாழ்க்கையின் சிறந்த தருணம் - 2011 உலகக் கோப்பையை எனது நாட்டிற்காக வென்றது - வான்கடே மைதானத்திலும் நடந்தது. எனது 200வது டெஸ்ட் போட்டியை இங்கு விளையாடும் பெருமையும் எனக்கு கிடைத்தது, இது எனக்காக தொடங்கிய அதே இடத்தில் எனது அன்பான ஆட்டத்திற்கு விடைபெற அனுமதித்தது.






வான்கடே எனக்கு ஒரு மைதானம் மட்டுமல்ல; அது என் இரண்டாவது வீடுஎன்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். தற்போது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர்,”2011 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை இந்தியர்கள் யாராலும் மறக்க முடியது. அது அவ்வளவு உணர்வுப்பூர்வமான ஒன்றுஎன்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர், “சச்சின் டெண்டுல்கருக்கும் வான்கடே மைதானத்திற்குமான தொடர்பு என்பது பிரிக்க முடியாததுஎன்று கூறியுள்ளார். முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.