அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள டாலரன்ஸ் ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி முதல் முறை டெஸ்ட் போட்டியை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்இந்த போட்டிக்கு முன், அயர்லாந்து அணி மொத்தம் 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதே இல்லை. எனினும், தற்போது ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று அயர்லாந்து சாதனை படைத்தது.


சொந்த மண்ணில் தோல்வி: 


டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராகிம் சத்ரன் 53 ரன்களும், கரீம் ஜனத் 41 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணி சார்பில் மார்க் அடயார் 39 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர யாங் மற்றும் கம்பைர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






முதல் இன்னிங்சில் 155 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணி 263 ரன்கள் எடுத்து 108 ரன்கள் முன்னிலை பெற்றது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கேம்பர் 49 ரன்களும், ஸ்டார்லின் 52 ரன்களும் எடுத்தனர். இது தவிர டேக்கர் 46 ரன்களும், ஆண்ட்ரூ மெக்பர்னி 38 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஜியா உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும், நவித் சத்ரன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ஆப்கானிஸ்தான் அணி வீழ்ந்த சோகம்: 


இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி போராடி 218 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 110 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில், கேப்டன் ஷாஹிதியை தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹிதி 55 ரன்கள் எடுக்க, குர்பாஸ் 46 ரன்கள் சேர்த்தார். இவர்களுக்கு அடுத்தபடியாக நூர் அலி சத்ரன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அயர்லாந்து அணியில் அடேர், பேரி மெக்கார்த்தி, யாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ஆண்ட்ரூ பால்பிர்னி ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார்.


ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நவித் சத்ரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 


அதிக போட்டிகளில் விளையாடி முதல் வெற்றியை பெற்ற அணி எது..? 






என்னதான் தற்போது ஒருநாள், டி20 மற்றும் டி10 என குறைந்த வடிவங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும், டெஸ்ட் போட்டிகளின் மீதான காதல் இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. இந்த காலத்தில் இரண்டு சக்திவாய்ந்த கிரிக்கெட் அணிகளாக இருக்கும் இந்தியாவும், நியூசிலாந்தும் அணியும் தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை மிகவும் தாமதமாகவே பெற்றது. இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது தங்களது 25வது டெஸ்ட் போட்டியில்தான். அதேபோல், நியூசிலாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது தங்களது 45வது டெஸ்ட் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.