சத்தீஸ்கரின் காரியாபந்த் மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு சிம் வாங்கியதில் ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் காரணமாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திர விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் ஆகியோரின் எண்களை 

சிம் கார்டில் நடந்த ஆச்சரியமான சம்பவம்

தேவ்போக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திராவின் மகன் மணீஷ், ஜூன் 28 அன்று புதிய சிம் வாங்க மொபைல் கடைக்கு சென்றார். கடை உரிமையாளர் ஷிஷுபால் வழக்கமான பதிவு செயல்முறைக்குப் பிறகு ஒரு எண்ணைக் கொடுத்தார். மணீஷ், நண்பர் கெம்ராஜுடன் சேர்ந்து சிம்மில் வாட்ஸ்அப்  இன்ஸ்டால் செய்து பார்த்த போது டிபியில் ரஜத் படிதாரின் புகைப்படம் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.

கிரிக்கெட் நட்சத்திரர்களின் தொடர்ச்சியான அழைப்புகள்

முதலில் இது ஒரு தொழில்நுட்ப பிழை என்று நினைத்த இவர்கள், சில நாட்களில் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகளைப் பெறத் தொடங்கினர். அழைப்புகளில் “நான் விராட் கோலி”, “நான் யாஷ் தயால்”, “நான் ஏ.பி. டி வில்லியர்ஸ்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் பேசினர். நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்று எண்ணிய மணீஷ் மற்றும் கெம்ராஜ், அவர்களும் நகைச்சுவையாகப் பதிலளித்தனர். இது ஜூலை 15 வரை நீடித்தது.

நேரடியாக ரஜத் படிதார் அழைத்த போது

இறுதியில், ரஜத் படிதார் தானே அழைத்து, “அண்ணா, நான் ரஜத் படிதார்… அந்த எண் என்னுடையது, தயவுசெய்து திருப்பி அனுப்புங்கள்” என்றார். இதற்கு மணீஷ், “நாங்கள் எம்.எஸ். தோனி” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். ஆனால் ரஜத், “போலீசை அனுப்புவேன்” என்றதும், பத்து நிமிடங்களில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது தான் அவர்கள் விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்தனர்.

சிம் எண் எப்படி கிடைத்தது?

ரஜத் படிதாரின் எண் 90 நாட்களுக்கு பயன்பாட்டில் இல்லாததால், தொலைத்தொடர்பு நிறுவனம் அதை புதிய வாடிக்கையாளருக்கு வழங்கியது. சம்பவம் எம்பி சைபர் செல் வரை சென்றது. காரியாபந்த் போலீஸின் உதவியுடன் சிம் மீட்டெடுக்கப்பட்டு ரஜத் படிதாரிடம் ஒப்படைக்கப்பட்டது.