டி20 உலகக் கோப்பை முடிவதற்கு முன்பே, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 2024ம் ஆண்டு முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன் டிராவி 2025க்கான தற்காலிக தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐசிசி சாம்பியன் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 


இருப்பினும், இந்த ஐசிசி சாம்பியன் டிராபி போட்டிக்கு முன்பே இந்திய அணி இக்கட்டான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா இல்லையா என்பதுதான் கேள்வி. ஐசிசி சாம்பியன் டிராபிக்கான தற்காலிக தேதிகள் வெளியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூன்று ஸ்டேடியங்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி, சாம்பியன்ஸ் டிராபி லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில்தான் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் விளையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய வீரர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும் வழங்குவதாக ஐசிசியிடம் பிசிபி தெரிவித்துள்ளது. லாகூர் நகரம் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது.  ஏதேனும், பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய செல்லவும், போட்டியினை காண இந்திய ரசிகர்களின் பயணம் மிகவும் வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


மேலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர அனைத்து வகைகளிலும் ஏற்பாடுகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. 


இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா..? 


அதானது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 சரியாக ஒரு மாதம் நடைபெறும். இந்த முறை சாம்பியன் டிராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது சாம்பியன் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுவது சந்தேகமாகவே தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ தயாராக இல்லை. அப்படி நடந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பிக்கைக்கு பெரிய அடி விழுந்துவிடும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதாவது பிசிசிஐ, எந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தானில் விளையாட தனது அணியை அனுப்ப மாட்டோம் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. 


இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வரவழைத்து, அங்கு போட்டியை விளையாடுமாறு இந்திய அணியை சமாதானப்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. அறிக்கையின்படி, இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை ஹைப்ரிட் வடிவத்தில் நடத்த ஐசிசி யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 






கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதால், இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஏனெனில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசிக்கு உறுதியான காரணம் இருக்க வேண்டும். பிசிசிஐ பாதுகாப்பு காரணங்களை கூறினால், மற்ற கிரிக்கெட் அமைப்புகளும் அதை பின்பற்ற வேண்டும். சமீபத்தில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதேபோல், எப்படியாவது பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே நேரத்தில், இந்திய அணியை பாகிஸ்தானில் விளையாட பிசிசிஐ ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு அமைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் காரணமாக இந்திய அணி ஹைப்ரிட் வடிவில் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கனவே இருதரப்பு தொடர் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இரு அணிகளும் ஒரு சில ஐசிசி அல்லது ஏசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதன் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின.