ICC Rankings: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில், இந்திய வீரர் ஜெய்ஷ்வால் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை:
கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய வீரர் அஷ்வின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கான்பூர் டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜெய்ஷவால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், நட்சத்திர வீரர் கோலி, கான்பூர் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 12வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பண்ட் 9வது இடம் பிடித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 15வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பும்ரா படைத்த சாதனை:
நடப்பாண்டில் பும்ரா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இது இரண்டாவது முறையாகும். அவர் கடந்த பிப்ரவரியில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார் . அதன்மூலம், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். பும்ராவுக்கு முன், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் சிறந்த இடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆவார். இவர் 1979-80ல் ஐசிசியின் தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்தார். முன்னதாக கடந்த பிப்ரவரியிலும் பும்ரா, அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:
தரவரிசை எண் | வீரர்கள் | புள்ளிகள் |
1 | ஜோ ரூட் (இங்கிலாந்து) | 899 |
2 | கேன் வில்லியம்சன் (நியூசி) | 829 |
3 | ஜெய்ஷ்வால் (இந்தியா) | 792 |
4 | ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்தி) | 757 |
5 | உஷ்மான் கவாஜா (ஆஸ்தி) | 728 |
6 | விராட் கோலி (இந்தியா) | 724 |
7 | முகமது ரிஸ்வான் (பாக்) | 720 |
7 | மார்னஸ் லபுஷக்னே (ஆஸ்தி) | 720 |
9 | ரிஷப் பண்ட் (இந்தியா) | 718 |
9 | டேரில் மிட்செல் (நியூசி) | 718 |
ஐசிசியின் டெஸ்ட் பவுலிங் தரவரிசை:
தரவரிசை எண் | வீரர்கள் | புள்ளிகள் |
1 | ஜஸ்பிரித் பும்ரா | 870 |
2 | அஷ்வின் | 869 |
3 | ஹேசல்வுட் | 847 |
4 | பாட் கம்மின்ஸ் | 820 |
4 | ககிசோ ரபாடா | 820 |
6 | ஜடேஜா | 809 |
7 | நாதன் லயன் | 801 |
7 | பிரபத் ஜெயசூர்யா | 801 |
9 | கைல் ஜேமிசன் | 714 |
9 | ஷாஹீன் ஷா அஃப்ரிடி | 709 |