Breaking LIVE: ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவின் தொடர்ச்சியாகத்தான், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்படுகிறதா? - நீதிபதி
கோலி, பும்ரா, ஜடேஜா, ஷ்ரேயஸ், பந்த் போன்ற முக்கிய வீரா்கள் இரண்டாவது ஆட்டத்திலிருந்துதான் இத்தொடரில் இணைகின்றனா்.
"காளியை அழிக்க முடியாது. காளிக்கு வன்கொடுமை செய்ய முடியாது. காளி மரணத்தின் தெய்வம்” - லீனா மணிமேகலை
பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? - நீதிபதி
அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? - நீதிபதி
கடந்த பொதுக்குழுவின் நீட்சி அல்ல இது. இது சிறப்பு பொதுக்குழு - ஈ.பி.எஸ்
பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபி எஸ் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் - இ.பி.எஸ் தரப்பு
ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவின் தொடர்ச்சியாகத்தான், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்படுகிறதா? - நீதிபதி
அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கு உரிமை உள்ளது - ஓ.பி.எஸ்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓபிஎஸ் மனு மீதான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பதவி விலகியதை எடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகர் கிரசன் சாலையில் உள்ள செய்யாதுரையின் அலுவலகத்தில் வருமான்வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் 41-வது பிறந்தாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் வாழ்த்தில், உங்களின் ஈடுஇணையில்லாத சாதனைகள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருக்கிறது. சாதாரண நிலையில் இருந்து வாழ்வில் பெருகனவுகளை அடையலாம் என்பதை உணர்த்துகிறது உங்கள் வாழ்வு.
சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37, 376 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4,672 ஆக விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.1064 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 14,650 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் B.F.Sc., B.Tech., BBA, B.Voc உள்பட ஒன்பது வகையான படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 8-ஆம் தேதி கடைசி நாள். www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Background
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த டெஸ்டில் விளையாடாத ரோஹித் சா்மா, இந்தத் தொடரில் களம் காணுவாா் என எதிா்பாா்க்கலாம். அவ்வாறு விளையாடினால், ருதுராஜ் ஓய்வுக்குத் தள்ளப்படுவாா். கோலி, பும்ரா, ஜடேஜா, ஷ்ரேயஸ், பந்த் போன்ற முக்கிய வீரா்கள் இரண்டாவது ஆட்டத்திலிருந்துதான் இத்தொடரில் இணைகின்றனா்.
அதேபோல் இங்கிலாந்து அணியிலும் அதிரடி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இயான் மோர்கன் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, இங்கிலாந்து அணிக்கு முதல் வெள்ளைப் பந்து போட்டி என்பதால் கேப்டன் பட்லர், வெற்றி பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
எனவே இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரா்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தொடக்க வீரா்களில் ஒருவராக இஷான் தோ்வாகும் பட்சத்தில், அயா்லாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 3-ஆவது இடத்துக்கு பரிசீலிக்கப்படலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -