ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் எங்களுக்கு என்ன தேவை பட்டதோ, அதை இந்திய  அணி வீரர்களுக்கு இடையே நடந்த பயிற்சி ஆட்டம் கொடுத்து பெரிது உதவியது என்று இந்திய அணி பந்து வீச்ச மற்றும் பேட்டிங்  பயிற்சியாளர்கள்  நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். 


பார்டர் கவாஸ்கர் தொடர்: 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி கடந்த வாரம் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. கேப்டன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


பயிற்சி ஆட்டம்: 


இந்திய அணி பெர்த் சென்றவுடன் அங்குள்ள பழைய வாக்கா ( WACA) கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் இடையே இந்த  பயிற்சி ஆட்டம் நடந்தது. உலகத்தின் அதிவேக மைதானமாக பார்க்கப்படும்  இந்த மைதானத்தில் ஆடியது நல்லதொரு பயிற்சியாக இருக்கும் கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்ப்பட்டதால் அவர் முதல் டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


அபிஷேக் நாயர்: 


இந்த நிலையில் பயிற்சி ஆட்டம் குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசுகையில், “


"நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு, கௌதம் பாய் (கௌதம் கம்பீர்), ரோஹித் (சர்மா), ஆகியோருடன் இந்த மூன்று நாட்களில் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்று  விவாதித்தோம், மேலும் இளம் வீரர்களுக்கு இங்குள்ள ஆடுகள சூழ்நிலை குறித்து அவர்களும் மூத்த வீரர்களும் ஆராய்ந்து, நிலைமைகளைப் புரிந்துகொள்வதற்கு, பேட்டிங் செயல்படுகளை மாற்றியமைக்க அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.


“நாங்கள் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்விளையாடுகிறோம். எனவே ஆரம்பத்தில், நாங்கள் நமது வீரர்களை பயிற்சி ஆட்டத்தில் ஆட வைத்தோம், நிஜமாக போட்டி எப்படி நடக்குமோ அது போல பேட்டிங் செய்ய சொனோம். ஆனால் முதலில் சீக்கிரம் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், நாங்கள் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க முயற்சித்தோம், இரண்டாவது முறையாக, நமது வீரர்கள்  சிறப்பாக இங்குள்ள மைதானத்தின் நிலைமைகளை நன்றாகப் புரிந்து சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்த போட்டியிலிருந்து என்ன பெற விரும்பினோமோ அதை  பெற்றோம்.


மோர்னே மோர்கல்:


“பவுலர்கள் பயிற்சி ஆட்டத்தில் பந்து வீசிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் இங்குள்ள நிலைமைகளை புரிந்துக்கொண்டு மிகச் சிறப்பாக பந்து வீசினர். 


அடுத்தாக சிராஜ் குறித்து பேசுகையில் “முகமது சிராஜ் ஒரு ஜாம்பவான். அவரின் ஆக்ரோஷமான மனநிலை, இந்திய அணி பந்து வீச்சை தலைமை தங்குவதில் மிக முக்கியமானவர். அவர் இந்த சுற்றுப்பயணத்தில் எப்படி பந்து வீச போகிறார் என்பதைப் பார்க்க நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ”என்று மோர்கெல் கூறினார். "கடந்த ஆண்டு, அவர் கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்ப்பட்டு அசத்தி இருந்தார், மேலும்  மூத்த மூத்தவீரராக, ஒரு முக்கியமான சுற்றுப்பயணத்தில் இதே போல சிறப்பக செயல்ப்படுவார் என நம்புகிறோம் என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார்.