ஆஸ்திரேலியாவில், உள்ளூர் டி-20 தொடரான பிக் பாஷ் லீக் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இடம் பெற்றுள்ள மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் இளம் இந்திய வீரர் உன்முக்த் சந்த் இரண்டாவது போட்டியில் தான் விளையாடிய அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அதில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான் விளையாடியது எனது கனவு நனவாகியது. நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு குட் அவுட்டிங். இதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்வேன். எனது அடுத்த போட்டிக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் மிகப்பெரிய போட்டியில் களமிறங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 






முன்னதாக, கடந்த அண்டர் 19 உலககோப்பை இறுதி போட்டியில் உன்முக்த் சந்த் சதமடித்து கோப்பை இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். அதன்பிறகு ஐபிஎல் தொடர், உள்ளூர் போட்டிகள் என அனைத்து விதமான போட்டிகளில் சந்த் விளையாடி வந்தாலும் இந்திய அணியில் இவரால் இடம் பெறமுடியவில்லை. இவருடன் அண்டர் 19 உலககோப்பை போட்டியில் விளையாடிய சந்தீப் சர்மா, ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் இடம் பிடித்து அசத்தினார். 






இதனால் கடந்த வருடம் உன்முக்த் சந்த் இந்திய அணியில் இருந்து அனைத்து விதமான போட்டிகளில் இருந்து அறிவித்து அமெரிக்க தொடர்களில் பங்கேற்றார். அந்த தொடரில் சந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் 11வது சீசன் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யபட்டார். மேலும், பிபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண